பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக விளங்குவதாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டத்தில் பழ. நெடுமாறன் பேசினார்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பழ நெடுமாறன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாமக வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் பேசி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டாலும் அதை சுற்றி மீன்பிடிப்பதற்கான உரிமையை வழக்கும் சட்டப்பிரிவு 6-ஐ முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை காலகட்டத்தில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக ரத்து செய்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். . கச்சத்தீவு யாரிடம் உள்ளது என்பது முக்கியமில்லை என்றும் கச்சத்தீவு சுற்றியுள்ள பகுதிகளில் தமிழர்கள் மீன் பிடிப்பதற்கு ஏதுவாக சட்டப்பிரிவு 6-ஐ அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும் என்றும் கூறினார். ஈழப்போரின் போது மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்க மாட்டார்கள் எனவும் அவர் பேசினார்.
இதை தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன், எந்த சிங்கள மக்கள் ராஜபக்சே சகோதரர்களை வெற்றிபெற செய்தி ஆட்சியில் அமர செய்தார்களோ அதே சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். ராஜபக்சேக்கள் சொந்த நாட்டிலேயே ஓடி ஒளிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஈழப்போர் நேரத்தில் மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை
இலங்கையில் சீனா ஆழமாக காலூன்றியிருப்பது இந்தியாவிற்கு ஆபத்து . அண்ணாமலை இந்த பிரச்சனை தொடர்பாக தெளிவாகவும், ஆழமாகவும் புரிந்து எப்படி சொல்லவேண்டுமே அப்படி பேசினார். இது மகிழ்ச்சியை தருகிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் அப்பிடி இருக்கிறார் அண்ணாமலை. பிரதமர் நரேந்திர மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக உள்ளதாகவும் பாராட்டி பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pazha Nedumaran, PM Narendra Modi