அத்திவரதரை தரிசிக்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

மோடி வருகையை முன்னிட்டு பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் காஞ்சிபுரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Web Desk | news18
Updated: July 29, 2019, 8:58 AM IST
அத்திவரதரை தரிசிக்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
அத்திவரதர்-மோடி
Web Desk | news18
Updated: July 29, 2019, 8:58 AM IST
அத்தி வரதரை தரிசிக்க பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி காஞ்சிபுரம் வர உள்ள நிலையில், பக்தர்களுக்கு பாதுகாப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மூலவர் வரதராஜ பெருமாளை தரிசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விழாவின் 28-ம் நாளான நேற்று இளம் நீலநிற பட்டாடையில் காட்சியளித்த அத்தி வரதரை தரிசிக்க லட்சக்கணக்கானோர் குவிந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் காயமடைந்தனர். இதனால்,கூட்டம் குறைந்த பின் கோவிலுக்கு செல்லும்படி பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.


இந்நிலையில், அத்தி வரதர் வைபவத்திற்கு வரும் பக்தர்களுக்கு மத்திய துணை ராணுவ பாதுகாப்பு கோரியும், மூலவரை தரிசிக்க அனுமதி கோரியும் உயர்நீதிமன்றத்தில் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

இதற்கிடையே, அத்தி வரதர் வைபத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 31-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் சயன கோலத்தில் காட்சி தரும் அத்தி வரதரை தரிசிக்கும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார்.

இரவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி விட்டு மறுநாள் காலையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கும் அத்தி வரதரையும் மோடி தரிசிக்க உள்ளார். பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் வருகை தருகின்றனர்.

Loading...

மோடி வருகையை முன்னிட்டு பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர் காஞ்சிபுரத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Also see... அத்திவரதரைக் காண அலை மோதும் கூட்டம்!





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...