• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

தேர்தல் பரப்புரைக்காக இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருவதை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 3000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக கோவை கொடிசியா வளாகத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கோவை ,நீலகிரி , திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்ட உள்ளார்.

இதற்காக இன்று விமானம் மூலம் கோவை வரும் பிரதமர் மோடி, மாலை 6.30 மணிக்கு கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே பிரதமர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் மட்டும் கோவை, திருப்பூர், ஈரோடு ,நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3,000 மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பிரசாரத்தை தொடர்ந்து வரும் 13-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், போட்டியிடும் தேனி தொகுதியிலும் மோடி பிரச்சாரம் செய்கிறார்.

இதற்காக தேனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் க.விலக்கு என்ற இடத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக, தேனியில் வரும் 12ம் தேதி ஈ.வி.கே.எஸ் இளகோவனுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

Also see...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: