• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிரச்சாரத்துக்காக மோடி நாளை தமிழகம் வருகை! ராகுல் வருகை எப்போது?

பிரச்சாரத்துக்காக மோடி நாளை தமிழகம் வருகை! ராகுல் வருகை எப்போது?

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கும் குறைவாக கால அவகாசம் உள்ளநிலையில், ராகுல் காந்தி மற்றும் மோடி ஆகியோர் ஏற்கெனவே முதற்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி நாளை தமிழகம் வரவுள்ளார். கோவையிலுள்ள பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளார்.

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்தநிலையில், 2-ம் கட்டப் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நாளை கோயம்புத்தூர் வரவுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 10 நாள்களுக்கும் குறைவாக கால அவகாசம் உள்ளநிலையில், ராகுல் காந்தி மற்றும் மோடி ஆகியோர் ஏற்கெனவே முதற்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டனர்.

    இந்தநிலையில், 2-ம் கட்ட பிரச்சாரத்துக்காக நாளை பிரதமர் மோடி கோயம்புத்தூர் வருகை தரவுள்ளார். இரவு 7.45 மணி அளவில் கொடீசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆதரித்து மோடி பேசவுள்ளார். அதனையடுத்து, 13-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், போட்டியிடும் தேனி தொகுதியிலும் மோடி பிரச்சாரம் செய்கிறார்.

    இதற்காக தேனி அருகே உள்ள ஆண்டிப்பட்டியில் க.விலக்கு என்ற இடத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேநாளில் ராமநாதபுரத்திலும் மோடி பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். தேனியில் மோடி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஒரு நாள் முன்னதாக, தேனியில் ஈ.வி.கே.எஸ் இளகோவனுக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

    அதற்காக, தேனி நகர் பைபாஸ் ரோடு புது பஸ்நிலையம் செல்லும் சாலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல் விவரம்:






    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: