முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரதமர் மோடி மார்ச் 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார்..!

பிரதமர் மோடி மார்ச் 27ம் தேதி தமிழ்நாடு வருகிறார்..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

PM Modi Visit Tamilnadu | விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் 2 லட்சத்து 36 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விமான முனையங்கள் கட்டப்படுகின்றன. இதன் முதல் கட்டட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது நவீன கருவிகள், உபகரணங்கள் பொருத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐந்து தளங்களை கொண்ட புதிய முனையத்தில், தரை தளத்தில் சர்வதேச பயணிகள் வருகைக்காகவும், இரண்டாவது தளத்தில் பயணிகள் புறப்படுவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். இங்கு கார் நிறுத்துமிடம், வணிக வளாகம், திரையரங்குகள் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டன.

Also Read: வதந்தி பரப்ப மட்டுமே தொழில்நுட்பத்தை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்... முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், மார்ச் 27ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி புதிய ஒருங்கிணைந்த முனையத்தை முறைப்படி திறந்து வைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

First published:

Tags: Chennai Airport, PM Modi