ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

”நம் தேசத்திற்காக தேவர் ஆற்றிய பங்கு தலைசிறந்தது”- பிரதமர் மோடி ட்வீட்

”நம் தேசத்திற்காக தேவர் ஆற்றிய பங்கு தலைசிறந்தது”- பிரதமர் மோடி ட்வீட்

தேவர் ஜெயந்தி-பிரதமர் மோடி ட்வீட்

தேவர் ஜெயந்தி-பிரதமர் மோடி ட்வீட்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அரசு சார்பில் மற்றும் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை தெரிவித்து வருகின்றனர்.

  மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் வருடம்தோறும் முதலமைச்சர் தொடங்கி முன்னணி அரசியல் பிரமுகர்கள், சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம்.

  அந்த வகையில் இந்தாண்டும் பசும்பொன்னில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். அதேபோல பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்திவருகின்றனர்.

  Read More : தூத்துக்குடியில் தேவரின் திருவுருவ சிலைக்கு கனிமொழி எம்பி மரியாதை..!

  அந்த வகையில் பிரதமர் மோடி முத்துராமலிங்க தேவரின் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரை வணங்குவதாக ட்வீட் செய்துள்ளார். அதில் “பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்.” என கூறியுள்ளார்.

  இதற்கு முன்னர் தமிழக முதல்வர் ஸ்டாலின், திமுக துணை பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி, பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Devar Jayanthi, Muthuramalinga Thevar, Thevar Jayanthi