• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

தமிழகத்தில் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சென்னை எழும்பூர் - மதுரை இடையே பகல் நேர புதிய ரயிலான தேஜஸ் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். மதுரை ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மொத்தம் ரூ,40,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கன்னியாகுமரிக்கு இன்று வரும் பிரதமர் நரேந்திர மோடி ரூ.40,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். சென்னை - மதுரை இடையே பகல் நேர தேஜஸ் ரயில் சேவையும் தொடங்கப்படுகிறது.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து புறப்பட்டு பகல் 2.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

    குமரியில் இருந்து கார் மூலம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரி மைதானத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் நடைபெறும் விழாவில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பன் புதிய பாலம், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கிலோ மீட்டர் தூர புதிய ரயில் பாதை திடடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சென்னை எழும்பூர் - மதுரை இடையே பகல் நேர புதிய தேஜஸ் ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். மதுரை ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மொத்தம் ரூ,40,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன.

    இந்த விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் கடந்த இருமுறை தமிழகம் வந்தபோது அரசு நிகழ்ச்சியுடன் பாஜக பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் இந்த முறை அரசு நிகழ்ச்சி மட்டுமே நடைபெறுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி முடிவான பின்பு, பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவும் இது அமைகிறது.

    நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

    Also Watch: கோடை காலங்களில் தோல் நோய்களிலிருந்து தப்பிக்க சிறந்த வழி இதான்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Anand Kumar
    First published: