தமிழகத்தில் ரூ. 31,500 கோடி மதிப்பிலான பெட்ரோலியத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

தமிழகத்தில் ரூ. 31,500 கோடி மதிப்பிலான பெட்ரோலியத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி

தமிழகத்தில் அமையவுள்ள 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும், முடிவுற்ற சில முக்கியத் திட்டங்களையும், நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

 • Share this:
  நாகை மாவட்டத்தில், இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலிய நிறுவனமும் இணைந்து, ஆண்டுக்கு, 90 லட்சம் டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலையை அமைக்க உள்ளன. 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திட்ட செலவில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் பெட்ரோல், டீசல் தயாரிக்கப்பட உள்ள இந்த ஆலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, 'காணொலிக் காட்சி' வாயிலாக, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

  அதனுடன், துாத்துக்குடி - ராமநாதபுரம் இடையில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய் வழித்தடத்தையும், சென்னை, மணலியில், பெட்ரோலில் இருந்து கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலையையும் பிரதமர் துவக்கி வைக்கிறார்.

  மேலும் படிக்க...புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் நடந்த மோதல்கள்

  நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: