ரஜினிகாந்தின் பாராட்டை ஆதரவாக எடுத்துக்கொள்ளலாமா? பிரதமர் மோடி பதில்

“ரஜினிகாந்த் என்னை நேரில் சந்திக்கும் போது, அவருக்கு அரசியல் ஆலோசனைகள் பற்றி பேசுவேன்” என்றும் பிரதமர் மோடி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

news18
Updated: April 13, 2019, 8:59 AM IST
ரஜினிகாந்தின் பாராட்டை ஆதரவாக எடுத்துக்கொள்ளலாமா? பிரதமர் மோடி பதில்
ரஜினிகாந்த் | மோடி
news18
Updated: April 13, 2019, 8:59 AM IST
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற நதிநீர் இணைப்பு திட்டத்தை ரஜினிகாந்த் பாராட்டியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்புக்கு தெரிவித்திருந்தார்.

நதிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டால் வறுமை ஒழியும் என்றும், வேலைவாய்ப்பு பெருகும் என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தின் வரவேற்புக்கு பிரதமர் மோடி நன்றி கூறியுள்ளார்.

படிக்க... சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167-வது படம் தர்பார்: வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

‘தினந்தந்தி’ நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், “சாமனிய மக்களின் தண்ணீர் பிரச்னையை ரஜினிகாந்த் பேசியிருப்பது நல்ல விஷயம். பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், ரஜினிகாந்தின் பாராட்டை ஆதரவாக எடுத்துக்கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, “2013 மற்றும் 2014-ல் அவரை சந்தித்து பேசினேன். அதன் பிறகு சந்திக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

“ரஜினிகாந்த் என்னை நேரில் சந்திக்கும் போது, அவருக்கு அரசியல் ஆலோசனைகள் பற்றி பேசுவேன்” என்றும் பிரதமர் மோடி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...