ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பான மருத்துவ வசதி - பிரதமர் மோடி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறப்பான மருத்துவ வசதி - பிரதமர் மோடி

அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி

அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் 89 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 2025 என்ற தொலை நோக்கு திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது என்று மோடி பேசினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

பிரதமர் மருத்துவர் காப்பீடு திட்டம் உலகத்திலேயே சிறந்த காப்பீடு திட்டம் என்று பிரதமர் மோடி மதுரையில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பேசினார்.

மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

இதனை அடுத்து வணக்கம் என்று பேச்சை தொடங்கிய அவர் கூறியதாவது, “உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ள மதுரைக்கு வந்துள்ளதில் பெருமை கொள்கிறேன். இங்கு புகழ்பெற்ற சிவாலயம் உள்ளது. நாட்டின் குடியரசு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இன்று மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இங்கு தொடங்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நாட்டின் சிறந்த மருத்துவனையாக திகழும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள மக்களுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும். மேலும் குஜராத், கவுகாத்தி ஆகிய இடங்களிலும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரையில் ரூ. 1264 கோடியில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைகிறது. நாட்டு மக்களுக்கு சுகாதார வசதிகள் அமைப்பதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் மதுரை, நெல்லை, தஞ்சை மருத்துவக்கல்லூரிகளில் பன்னோக்கு சிகிச்சை கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் நவீன மயமாக்கப்பட்டுள்னன. ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. உலகத்திலேயே இதுதான் சிறந்த காப்பீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 1 கோடியே 67 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் 89 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். 2025 என்ற தொலை நோக்கு திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது" என்று மோடி பேசினார்.

Also See...

Published by:Sankar
First published:

Tags: Lok Sabha Key Constituency, PM Modi