ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர் மோடி

இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்: பிரதமர் மோடி

இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தின் மொழி, கலாச்சாரத்தை கொண்டாட காசி தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய பிரதமர் மோடி, ’வணக்கம்’ என கூறி தமிழில் கூறி உரையை தொடங்கினார். பட்டம் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் காந்திகிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது ஊக்கம் அளிப்பதாக பேசிய பிரதமர், சுதேசி இயக்கத்தின் மையப் புள்ளியாக இருந்தது தமிழ்நாடு என கூறினார்.

  காந்தி கூறியபடி சுயசார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மத்திய அரசு பாடுபடுகிறது என்றும் ஒன்றுபட்ட சுதந்திரமான இந்தியாவுக்காக பாடுபட்டவர் மகாத்மா காந்தி என புகழாரம் சூட்டினார். கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி, காந்தியின் முக்கிய குறிக்கோள் கிராமப்புற வளர்ச்சிதான் என்றும் கிராமத்திற்கும் நகரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம் என பெருமிதம் கொண்டார்.

  இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்தை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

  விவேகானந்தரின் வீர வணக்கம் செலுத்தி வரவேற்ற பூமி தமிழ்நாடு என்றும் சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருந்துள்ளனர். தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை கொண்டாட காசி தயாராக உள்ளது என்றும் தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மற்றவர்களின் கலாசாரத்திற்கு மதிப்பளிப்பதே தேச ஒற்றுமைக்கு காரணம் என பிரதமர் மோடி பேசினார்.

  தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, கதர் என்பது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது என்றும் கடந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி அளவுக்கு காந்தி கிராமப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுதாக தெரிவித்தார். சங்க கால உணவுப்பொருள்களை மீண்டும் மக்கள் விளைவிக்க வேண்டும், இயற்கை வேளாண்மையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார். கடந்த 8 ஆண்டுகளில் சூரிய ஒளிமின் சக்தி பயன்பாடு 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Dindugal, PM Modi