Home /News /tamil-nadu /

சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் - பிரதமர் மோடி புகழாரம்

சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்க தேவர் - பிரதமர் மோடி புகழாரம்

Narendra Modi

Narendra Modi

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்டவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது குருபூஜை விழாவை முன்னிட்டு, தேவருக்கு புகழாரம் சூட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேதாஜியின் நண்பர்:

தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த முத்துராமலிங்க தேவர், சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். மேலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தலைமையில், பிரிட்டிஷ் அரசை எதிர்த்த இந்திய தேசிய ராணுவத்துக்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமைக்குரியவர். தெய்வத் திருமகனார் என மக்கள் அவரை போற்றுகின்றனர்.

முத்துராமலிங்க தேவர் நேதாஜியுடன் நெருங்கிய நட்பு பாராட்டியவர். நேதாஜி தொடங்கிய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் இருந்தவர் முத்துராமலிங்க தேவர். மேலும் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Also read:   மோடியின் வலிமைக்கு காங்கிரஸ் தான் காரணம் – காங்கிரஸை காய்ச்சி எடுத்த மம்தா பானர்ஜி!

தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின்:

தேவர் 1908ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பிறந்தவர், 55 வயதில் தனது பிறந்த தினமன்றே மறைந்தார். அவரின் குருபூஜை விழாவை தமிழக அரசு விழாவாக கொண்டாடுகிறது. இந்நிலையில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தேவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது, “தேவர் ஜெயந்தியின் சிறப்பு நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்.” இவ்வாறு பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



மதுரை விமான நிலையத்துக்கு தேவரின் பெயர்:

தேவரின் 114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் நயினார் நாகேந்திரன் ஹெச்.ராஜா ஆகியோர் இருந்தனர்.

Also read:    முகத்தை மூடி ஆசிரியரை சரமாரியாக தாக்கிய 9ம் வகுப்பு மாணவர்கள் – சொன்ன காரணத்தால் அதிர்ச்சி!

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட மத்திய அரசிடம் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என்று கூறினார்.

 

 
Published by:Arun
First published:

Tags: Muthuramalinga Thevar, Thevar Jayanthi

அடுத்த செய்தி