ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

’நாமக்கல் என்றதும் கனிகாவின் பெயரே நினைவுக்கு வருகிறது...’ பிரதமர் மோடி பாராட்டிய தமிழக மாணவி

’நாமக்கல் என்றதும் கனிகாவின் பெயரே நினைவுக்கு வருகிறது...’ பிரதமர் மோடி பாராட்டிய தமிழக மாணவி

மாணவியின் குடும்பம்

மாணவியின் குடும்பம்

கடினமான குடும்ப சூழலிலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல் மாணவி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  12ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதித்தவர்தான் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கனிகா. மன் கி பாத் நிகழ்ச்சியில் பொதுமக்கள் உடனான உரையாடலின்போது, கனிகாவிடம் பிரதமர் மோடி பேசினார்.

  கடினமான குடும்ப சூழலிலும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக கனிகா திகழ்வதாக பிரதமர் மோடி அப்போது பாராட்டி வாழ்த்தினார். நாமக்கல் என்றதுமே ஆஞ்சநேயர் கோயில் நினைவுக்கு வரும் நிலை மாறி கனிகாவின் பெயரே நினைவுக்கு வருவதாக பிரதமர் மோடி கூறியதை பூரிப்புடன் பகிர்ந்து கொள்கிறார் கனிகா.


  படிக்க: கொரோனா உறுதியான 3,338 பேரைக் கண்டறிய முடியாமல் திணறும் பெங்களூரூ மாநகராட்சி

  படிக்க: சென்னையில் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி - தற்கொலை என நாடகமாடியது அம்பலம்

  படிக்க: நானும், 82 வயது எனது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - அனுபவம் பகிரும் விஷால் வீடியோ


  மருத்துவம் படித்து, ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் கனிகா. லாரி ஓட்டுநரான கனிகாவின் தந்தை நடராஜன், தனது மகளின் லட்சியத்திற்காக உறுதுணையாக இருந்து வருகிறார். பல முக்கிய பணிகள் இருந்தும் தன் மகளைக் கண்டறிந்து நாட்டின் பிரதமர் வாழ்த்தி பாராட்டியிருப்பது உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுப்பதாக கூறுகின்றனர் கனிகாவின் பெற்றோர்.

  கனிகாவின் சகோதரியும் மருத்துவப் படிப்பு படித்து வருவது குறிப்பிடதக்கது.

  Published by:Sankar
  First published:

  Tags: Mann ki baat, Namakkal, PM Modi