பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று தான் படித்த விழுப்புரம் பள்ளிக்குச் செல்லும் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

5ம் வகுப்பு வரை பயின்ற சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளிக்கும் நிர்மலா சீதாராமன் வருகை தரவிருக்கிறார். இதனை அறிவுறுத்தியவர் பிரதமர் மோடி.

 • Last Updated :
 • Share this:
  தான் பயின்ற விழுப்புரம் பள்ளிக்கு நிர்மலா சீதாராமன் செல்லவிருக்கிறார். பிரதமர் மோடி அறிவுறுத்தியதையடுத்து தான் பயின்ற பள்ளிக்கு நேரில் வருகிறார் நிர்மலா சீதாராமன்.

  மத்திய பட்ஜெட் எதை நோக்கியது என்பதை விளக்க 15 மாநிலங்களில் கருத்தரங்குகள், விளக்கக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார் நிர்மலா சீதாராமன். வரும் 13ம் தேதியன்று விழுப்புரத்தில் மகளிர் அணி நடத்தும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.

  அப்போது தான் 5ம் வகுப்பு வரை பயின்ற சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளிக்கும் நிர்மலா சீதாராமன் வருகை தரவிருக்கிறார். இதனை அறிவுறுத்தியவர் பிரதமர் மோடி. அதனை ஏற்று நிர்மலா சீதாராமன் பள்ளிக்கு வருகை தருகிறார்.

  மேலும் படிக்க... பட்ஜெட் 2021 : அனைத்து துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள்!

  25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் படித்த பள்ளியைக் காண மீண்டும் வருகை தருகிறார் நிர்மலா சீதாராமன்.

  நேற்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்தன. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நாட்டை விற்கும் பட்ஜெட் என்று சாடியுள்ளது.

  காங்கிரஸ் கட்சியும் அதே தொனியில், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதே தொனியில் விமர்சனங்களை முன் வைத்தன.

  ஆளும் பாஜக தொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட் என்றும்  தொழிலதிபர்கள், கார்ப்பரேட்களும் வளர்ச்சி நோக்கிய பட்ஜெட் என்றும் கூறியுள்ளனர்.

  மேலும் சில நிபுணர்கள் சுகாதாரம், ஆரோக்கியம், மருத்துவ நலன்களுக்காக பெரிய தொகையை ஒதுக்கியதைப் பாராட்டியுள்ளனர்.

  தேர்தல் காணும் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சலுகைகள் வழங்கியதை தேர்தல் உத்தி என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

  இந்நிலையில்தான் மக்களுக்கு பட்ஜெட்டின் தன்மைகள் அதில் கூறப்பட்டுள்ள நலத்திட்டங்கள் பற்றி விளக்க 15 மாநிலங்களில் சிறப்புக் கூட்டங்கள், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  அதில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று கேள்விகளுக்கு பதிலளிப்பார். இதற்காகத்தான் விழுப்புரம் வருகை தருகிறார் நிர்மலா சீதாராமன்,

  அப்போது தான் 5ம் வகுப்பு வரை பயின்ற சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் பள்ளிக்கும் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வருகை தருகிறார் .
  Published by:Muthukumar
  First published: