முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா

காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா

  • Last Updated :
  • Dindigul, India

காந்திகிராம பல்கலைகழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அத்துடன் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் நடைபெற உள்ளது.

இந்த இருவிழாக்களிலும் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்த விழாவில் 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும் வழங்கவுள்ளார்.

' isDesktop="true" id="834923" youtubeid="Lb5YNLbmTAs" category="tamil-nadu">

இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

top videos

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    First published:

    Tags: CM MK Stalin, PM Modi, RN Ravi, Tamil Nadu Governor