ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான் - மத்தியக் கல்வி அமைச்சர்

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான் - மத்தியக் கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர்

தமிழ்நாட்டில் கல்வி பயில வரும் வெளி மாநில மாணவர்கள் தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும் - மத்திய கல்வி அமைச்சர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் மொழி குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவது அரசியல் ரீதியானது அல்ல என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்தில் 33-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில்

ஆயிரத்து 124 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், யுபிஎஸ்சி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்கப்படுவதாகக் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான் என்று கூறிய அவர், மொழிகளில் பாகுபாடு பார்ப்பதாகக் கூறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார். தமிழ் மொழி மிகப் பழமையானது என்றும் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள் உலக கட்டடக் கலைகளின் அதிசயமாகத் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக, திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப  வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களின் திறப்பு விழாவில் பேசிய அமைசர் பிரதான், " தமிழ்நாட்டில் கல்வி பயில வரும் வெளி மாநில மாணவர்கள் தமிழ் மொழி படிக்கவும், எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Tamil