முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரதமர் மோடியே எனது ஒரே தலைவர்.. காயத்ரி ரகுராம் ட்விட்!

பிரதமர் மோடியே எனது ஒரே தலைவர்.. காயத்ரி ரகுராம் ட்விட்!

பிரதமர் மோடியே எனது ஒரே தலைவர்.. காயத்ரி ரகுராம் ட்விட்!

பிரதமர் மோடியே எனது ஒரே தலைவர்.. காயத்ரி ரகுராம் ட்விட்!

Gayathri Raghuramm | கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் மீண்டும் நீக்கம் செய்யப்பட்டு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :

பாஜகவில் தான் வகித்து வந்த பதவி பறிபோன நிலையில், பிரதமர் நரேந்திர மோடியே எனது ஒரே தலைவர் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக மாநில நிர்வாகிகளின் புதிய பட்டியலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள் என்றும் தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் என  அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக நிர்வாகிகளின் புதிய பட்டியலில், பொதுச் செயலாளராக விருப்பம் தெரிவித்திருந்த நயினார் நாகேந்திரனுக்கு, துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டு, சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் நயினார் நாகேந்திரனிடம் இருந்து துணை தலைவர் பதவி பறிக்கப்பட்டது.

அதேபோல் துணைத்தலைவரிலிருந்து பொதுச் செயலாளராக பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வி.பி.துரைசாமி அதே பொறுப்பில் நீடிக்கிறார்.

பொதுச் செயலாளராக இருந்த கரு.நாகராஜனுக்கு துணைத்தலைவர் பதவி மாற்றி வழங்கப்பட்டுள்ளது.  மேலும், கே.பி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, நாராயணன் திருப்பதி, பால் கனகராஜ் ஆகியோரும் மாநிலத் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஏற்கனவே பதவி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் கலை, கலாச்சார பிரிவு மாநில தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் மீண்டும் நீக்கம் செய்யப்பட்டு பெப்சி சிவக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  தொடர்ந்து, காயத்ரி ரகுராமனுக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், பாஜகவில் தான் வகித்து வந்த பதவி பறிபோன நிலையில், பிரதமர் நரேந்திர மோடியே எனது ஒரே தலைவர் என காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, அவரது ட்விட்டர் பதிவுக்கு பின்னுட்டம் அளித்த ஒரு நபர்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பின்பு அதிகம் விமர்சிக்கப்பட்டவர் நீங்கள் தான். அதனால், உங்களுக்கு ஒரு நாள் வரும். அதுவரை பொறுமையுடன் இருக்கவும் என்று ஒரு பதிவர் தெரிவித்திருந்தார்.

top videos

    அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராமன், மிக்க நன்றி ஜி, கடந்த 8 வருடமாக உழைத்து வருகிறேன். தொடர்ந்து, பாஜகவுக்காக உழைப்பேன். மனம் தளர்ந்துவிட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: BJP, Gayathri Raguramm