பிரதமர் மோடி திருடன் தான்! - சரத்குமார்

பிரதமர் மோடி டீ விற்று முன்னேறியவர், நான் பேப்பர் விற்றவன் என்று சரத்குமார் பேசியுள்ளார்

பிரதமர் மோடி திருடன் தான்! - சரத்குமார்
சரத்குமார் - நடிகர்
  • News18
  • Last Updated: April 14, 2019, 4:06 PM IST
  • Share this:
பிரதமர் மோடி திருடன் தான், மக்கள் மனதைக் கவர்ந்த திருடன் என்று சரத்குமார் பேசியுள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து, பிரசாரம் செய்த நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், ‘பிரதமர் மோடி டீ விற்று முன்னேறியவர், நான் பேப்பர் விற்றவன். நாட்டாமை ஆகிய நான் நியாயத்தை மட்டுமே சொல்வேன் ' என்று பேசினார். இந்தப் பிரசாரத்தின் போது, அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், சரத்குமாருடன் வரவில்லை.

மேலும் அவர், ‘பிரதமர் மோடி காவலாளி கிடையாது, திருடன் என்று ராகுல் காந்தி சொல்கிறார். ஆமாம் மோடி திருடன் தான். மக்கள் மனதை கவர்ந்த திருடன். மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து உங்கள் உள்ளங்களைக் கவர்ந்தவர் மோடி. உங்களுக்காக உழைக்கக் காத்திருப்பவர் தான் பாரத பிரதமர் மோடி’ என்று பேசினார்.


Also watch

First published: April 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading