அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக சார்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு பிரதமர் மோடி அழைப்பு!
எடப்பாடி பழனிசாமி, நரேந்திர மோடி.
  • Share this:
நாடாளுமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் மேற்கொள்ளவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி, அண்மையில் மாநில முதலமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களுடன் வரும் 8-ம் தேதி காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

அதில், நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கவுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக சார்பில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.


Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading