மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!

அத்துடன் திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: February 10, 2019, 4:30 PM IST
  • Share this:
பிரதமர் மோடி சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை திருப்பூரிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.

ஆந்திராவிலிருந்து விமானம் மூலம், கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடியை விமானநிலையத்தில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றடைந்தார்.

திருப்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். குறிப்பாக, சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப் பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.


அத்துடன் திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கே.கே.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள 470 படுக்கைகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கட்டிடத்தையும் திறந்து வைதார்

எண்ணூர் பி.பி.சி.எல். கச்சா எண்ணெய் குழாய் பாதையை நாட்டுக்கு அற்பணித்தார். சென்னை துறைமுகத்தில் இருந்து மணலியில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனத்துக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் தொடங்கிவைத்தார்.

Also see:
First published: February 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்