ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாடு தேசிய உணர்வின் உரைவிடமாக என்றும் இருந்துள்ளது - பிரதமர் மோடி

தமிழ்நாடு தேசிய உணர்வின் உரைவிடமாக என்றும் இருந்துள்ளது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி பேச்சு

காசி தமிழ் சங்கமம் காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவைக் கொண்டாடும் நிகழ்வாகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள காந்தி கிராம நிறுவனத்தின் பவளவிழா ஆண்டு கொண்டாட்டம், காந்தி கிராம பல்கலைக் கழகத்தின் 36ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் பண்பாடு, தமிழர்களின் உணர்வுகள் குறித்து பேசினார்.

  அவர் தனது உரையில் பேசியதாவது, “தமிழ்நாடு தேசிய உணர்வின் உறைவிடமாக எப்போதும் உள்ளது. சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டிலிருந்து திரும்பிய போது அவருக்கு ஒரு நாயகருக்கான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதேபோல் முப்படை தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் மறைவுக்கு தமிழ்நாடு மக்கள் ‘வீரவணக்கம்’ என்ற முழக்கங்கள் எழுப்பியதை நினைவு கூர்கிறேன்.

  காசியில் விரைவில் நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமம் குறித்து அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான உறவைக் கொண்டாடும் நிகழ்வாகும். இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதன் செயல்வடிவமாகும். ஒருவரோடு ஒருவருக்கான அன்பும், மரியாதையும் நமது ஒற்றுமையின் அடிப்படையாகும்.

  இதையும் படிங்க: ஆண்டுக்கு ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? 10% இடஒதுக்கீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் கேள்வி

  இந்த வேளையில் ராணி வேலு நாச்சியாரின் தியாகங்களை நினைவு கூர்வது அவசியம். பிரிட்டிஷாரை எதிர்த்த போரின் தயார் நிலைக்காக அவர் இங்குதான் தங்கியிருந்தார். மகளிர் சக்தியின் ஆற்றலை காணுகின்ற பகுதியில் இன்று நான் இருக்கின்றேன். வேலு நாச்சியாரைப் போலவே இங்கு பட்டம் பெறும் இளம் பெண்களை மாபெரும் மாற்றங்களை செய்பவர்களாக நான் காண்கிறேன். கிராமப்புற பெண்கள் வெற்றி பெற நீங்கள் உதவ வேண்டும். அவர்களின் வெற்றி தேசத்தின் வெற்றியாகும்” என்று அவர் தெரிவித்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Dindigul, PM Modi, Tamil Nadu