கொரோனா தடுப்பு, மருத்துவ சிகிச்சை குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து முதலமைச்சர் இடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் என மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து முதலமைச்சர் இடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார் என மக்கள் தொடர்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள செய்தியின்படி, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்களைக் குறித்து கேட்டு அறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பிரதமர் மோடி

  இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில், ஒரு நாளைக்கு 48000 கொரோனா வைரஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாகவும், பரவலைத் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு முழுவீச்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Gunavathy
  First published: