கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி 'மருதமலை முருகனுக்கு அரோகரா' என்று உரையை ஆரம்பித்தார்.
கோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரதமர் மோடி கோவையில் பிரசாரம் மேற்கொண்டார். பி
ரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி 'மருதமலை முருகனுக்கு அரோகரா' என்றும் வணக்கம் சகோதர, சகோதரிகளே என தமிழில் பேசி உரையை தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் கல்வி, தொழில் வளம் நிறைந்த கோவையில் பேசுவதில் பெருமை அடைகிறேன். பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
உலகளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது.நிலையான ஆட்சி அமைய வேண்டும் என தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. 21-ம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை காட்டப்போகும் தேர்தல் இது அமையும்.
நம் நாட்டு மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பித் தரப்படும்.துல்லிய தாக்குதல் நடந்ததா?விமானப்படை தாக்குதல் நடத்தியதா என எதிர்க்கட்சியினர் கேட்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் எண்ணங்கள் நாட்டை காக்க உதவாது.ராணுவம், விமானப்படை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் சந்தேகித்து வருகின்றன.தேசியவாதியாக இருப்பது குற்றமா? என பல வாதங்களை முன்வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.