இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், இரு தரப்பும் இணைந்தால் மட்டுமே வரக்கூடிய தேர்தல்களில் எளிமையான வெற்றியை பெற முடியும் என்பதால் இணைப்பு அவசியம் என்கிறது பாஜக வட்டாரம். தற்பொழுது பல்வேறு பிரிவுகளாக அதிமுக பிரிந்திருப்பது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பாதிக்கும் என்பதும் பாஜகவின் புரிதலாக உள்ளது.
அதே சமயம், பாஜக விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் வட மாநிலங்களில் பாஜக தங்கள் நட்பு கட்சிகளின் ஆட்சியை எப்படி வீழ்த்தியது என்பது தங்களுக்கு தெரியும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த பொன்னையன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்து விட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடர வேண்டும் என்பதன் காரணமாகவே அதிமுக ஒன்றிணைப்பிற்கான அழுத்தத்தை பாஜக கொடுப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இடைத்தேர்தலில் பாஜக கட்டாயம் போட்டி இல்லை என்ற நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், அதிமுக பிரிந்து இருந்தால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடையும் என்ற அச்சம் அக்கட்சியிடம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்ற உத்தரவு.. அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்க இபிஎஸ் தரப்பு எடுத்த அதிரடி முடிவு..!
இதனால், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துதான் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸின் இணைவுக்கான முயற்சியை தாங்கள் பகிரங்கமாக முடிவெடுத்துள்ளதாகவும் பாஜக தரப்பு தெரிவிக்கிறது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைப்பை பாஜக மட்டுமன்றி பிரதமர் மோடியும் உற்று நோக்கி வருவதாக அக்கட்சி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்த இணைப்பு அடுத்த மூன்று மாதத்தில் சாத்தியம் இல்லை என்றால் பாஜக அடுத்த கட்ட திட்டமிடலை நோக்கி நகரும் என்றும் பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK, AIADMK Alliance, OPS - EPS, PM Modi