தான் மட்டுமே அறிவாளி என நினைக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் இங்கிருக்கிறார் - பிரதமர் மோடி

தமிழகத்தில் தொழில் பூங்கா அமைவதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

news18
Updated: February 10, 2019, 8:32 PM IST
தான் மட்டுமே அறிவாளி என நினைக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் இங்கிருக்கிறார் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
news18
Updated: February 10, 2019, 8:32 PM IST
தான் மட்டுமே அறிவாளி என நினைக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் இங்கிருக்கிறார் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஆந்திராவிலிருந்து விமானம் மூலம், கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடியை விமானநிலையத்தில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றடைந்தார்.திருப்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப் பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி,  ‘இந்தியா அனைத்திலும் தன்னிறைவு பெற வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் 2 பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கபடவுள்ளது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைவதால் வேலைவாய்ப்பு அதிகமாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற 50 ஆண்டு கோரிக்கையை நமது மத்திய அரசு நிறைவேற்றியது.

சாகர் மாலா திட்டத்தின் மூலம் கடற்கரைப் பகுதிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது நாட்டில் சாலைகள் அமைக்கும் வேகம் இரு மடங்காகி உள்ளது. உலகத்திலேயே இந்தியாவில் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தான் மட்டுமே அறிவாளி என நினைக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் இங்கிருக்கிறார். விலை உயர்ந்த ஐஸ்கிரீம், மினரல் வாட்டர் வாங்குவதாக நடுத்தர மக்களை அவமதித்தவர் அவர். அவரை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் இதே நிலைமை நீடித்தால் அவருடைய கட்சியினரே அவரை நிராகரித்து விடுவர்’ என்று பேசியுள்ளார்.

நான் தோற்றுவிடுவேன் என்று சொல்பவர்கள் எதற்காக மெகா கூட்டணி அமைக்கின்றனர் - மோடி


Also watch
Loading...
First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...