கோவையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்க பூமி பூஜை: தடபுடலான ஏற்பாடுகள்

கோவையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்க பூமி பூஜை: தடபுடலான ஏற்பாடுகள்

பிரதமர் மோடி

பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தொடர்ந்து, பா.ஜ., முக்கிய தலைவர்கள் வருகின்றனர்.

 • Last Updated :
 • Share this:
  கோவை 'கொடிசியா' அருகே உள்ள மைதானத்தில், வரும் 25ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடக்கிறது. அதற்கான மேடை அமைப்பதற்கான, பூமி பூஜை நேற்று நடந்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங்., பங்கேற்று மலர்த்துாவியும், தண்ணீர் ஊற்றியும், பூமி பூஜையில் பங்கேற்றனர்.

  பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளர் செல்வகுமார், மாநில துணைத்தலைவர்கள் அண்ணாமலை, கனகசபாபதி, கோவை மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் உடனிருந்தனர்.

  பிரதமர் மோடி கோவையில் உரை நிகழ்த்தும் பிரமாண்ட மேடை அமைப்பதற்கான பூமி பூஜை, நேற்று மங்கல இசை முழங்க கோலாகலமாக நடந்தது.

  அப்போது பாஜக மாநில தலைவர் முருகன் கூறும்போது, “பிரதமர் மோடி கோவைக்கு, 25ம் தேதி வருகிறார். பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தொடர்ந்து, பா.ஜ., முக்கிய தலைவர்கள் வருகின்றனர். ஊழல் கறை படிந்த தி.மு.க., தான் எங்களுடைய பிரதான எதிரி. அதை மையமாக வைத்தே, எங்களது பிரசாரம் இருக்கும்.

  கடந்த 10 நாட்களுக்கு முன், தமிழகத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தை தேசிய தலைவர் நட்டா துவக்கி வைத்தார். தேர்தல் களப்பணிகளை முடுக்கிவிட, சென்னை, கோவை ஆகிய இரு இடங்களிலும் பா.ஜ., தலைமை நிர்வாகிகளுடன், மாநில மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கின்றன.” என்றார்.
  Published by:Muthukumar
  First published: