திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின் தனது தந்தையும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவிடத்தில், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி "முயற்சி. முயற்சி.. முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சருக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார்.
Birthday greetings to Tamil Nadu CM Thiru @mkstalin Ji. May he be blessed with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) March 1, 2023
இதேபோன்று 70-வது பிறந்தநாள் காணும் முதலமைச்சர் ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, MK Stalin, Tamil News