ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கனமழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடி!

கனமழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடி!

தமிழகத்தில்‌ கனமழையால்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகள்‌ குறித்து முதல்வர்‌ மு.க.ஸ்டாலினிடம்‌ தொலைபேசி வாயிலாக‌ பிரதமர்‌‌ நரேந்திர மோடி கேட்டறிந்தார்‌.

தமிழகத்தில்‌ கனமழையால்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகள்‌ குறித்து முதல்வர்‌ மு.க.ஸ்டாலினிடம்‌ தொலைபேசி வாயிலாக‌ பிரதமர்‌‌ நரேந்திர மோடி கேட்டறிந்தார்‌.

தமிழகத்தில்‌ கனமழையால்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகள்‌ குறித்து முதல்வர்‌ மு.க.ஸ்டாலினிடம்‌ தொலைபேசி வாயிலாக‌ பிரதமர்‌‌ நரேந்திர மோடி கேட்டறிந்தார்‌.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்‌, 36 மாவட்டங்களில்‌ அதிக அளவில்‌ மழை பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில்‌ அதிகபட்சமாக 134.29 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, மீட்பு மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.

  இந்நிலையில், தமிழகத்தில் கனமழையால்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகள்‌ குறித்து முதல்வர்‌ மு.க.ஸ்டாலினிடம்‌ தொலைபேசி வாயிலாக‌ பிரதமர்‌‌ கேட்டறிந்துள்ளார்‌.

  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழ்நாட்டின்‌ பல்வேறு பகுதிகளில்‌ பெய்து வரும்‌ கனமழை குறித்தும்‌, அதனால்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகள்‌ குறித்தும்‌ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்‌ தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்‌.

  தமிழக முதல்வர் மழை, வெள்ள பாதிப்புகள்‌ குறித்தும்‌, தமிழ்நாடு மேற்கொண்டு வரும்‌ நிவாரணப்‌ பணிகள்‌ பற்றியும்‌ பிரதமருக்கு எடுத்துரைத்து, தமிழகத்தின்‌ மாநில பேரிடர்‌ நிதியானது கொரோனா நிவாரணப்‌ பணிகளுக்கும்‌ இதுவரை ஏற்பட்டுள்ள பல்வேறு பாதிப்புகளுக்கும்‌ செலவு செய்யப்பட்டுள்ளதால்‌, தேசிய பேரிடர்‌ நிதியிலிருந்து போதுமான நிதியினை ஒதுக்கீடு செய்துதர வேண்டும்‌ எனக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

  இதுகுறித்து கேட்டறிந்த பிரதமர், தமிழகத்தில்‌ கனமழையால்‌ ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்‌ செய்திட தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும்‌, மீட்புப்‌ பணிகள்‌ மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும்‌ உறுதியளித்துள்ளார்‌.

  இதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பேசியதை அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசினேன். மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விவாதித்தேன். மீட்பு, நிவாரண நடவடிக்கைகளில் மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தேன். அனைவரின் நலன், பாதுகாப்புக்கு பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Chennai Rain, Heavy rain, PMModi