சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி வருகையில் காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 • Share this:
  டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி.  சென்னை வந்த மோடிக்கு தலைமை செயலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையார் கப்பற்படை தளத்துக்கு செல்கிறார். கப்பற்படை தளத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வரம் பிரதமர் மோடியை வரவேற்க உள்ளனர்.

  பின்னர் அங்கிருந்து தரை வழி மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி வருகை புரிவதால் சென்னை விமான நிலையம், அடையார் கப்பற்படை தளம், நேரு விளையாட்டரங்கம் ஆகிய பகுதிகளில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  பிரதமர் மோடி வருகையில் காமராஜர் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மோடியை வரவேற்க சாலையின் இருபுறங்களிலும் தொண்டர்கள் அணிவகுத்து காத்திருக்கின்றனர்.
  Published by:Vijay R
  First published: