ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காஞ்சிபுரம் இளம் விவசாயியை பாராட்டிய பிரதமர் மோடி.. கடைக்கோடி விவசாயிக்கு அங்கீகாரம் என நெகிழ்ச்சி!

காஞ்சிபுரம் இளம் விவசாயியை பாராட்டிய பிரதமர் மோடி.. கடைக்கோடி விவசாயிக்கு அங்கீகாரம் என நெகிழ்ச்சி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயி ஒருவரை பிரதமர் மோடி நேற்று மனதின் குரல் நிகழ்ச்சி உரையில் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பிரதமர் நரேந்திர மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிறுக்கிழமை அன்று, நாட்டு மக்களிடையே மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் நாட்டில் வித்தியாசமான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுத்து சாதிக்கும் நபர்களை பிரதமர் குறிப்பிட்டு பேசி அவர்களை பாராட்டுவார். அவ்வாறு தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை சேர்ந்த விவசாயியை நேற்றைய உரையில் புகழ்ந்து பாராட்டியுள்ளார். இந்த விவசாயி சோலார் மின் திட்டம் மூலம் தனது வயலில் வேளாண்மையை மேற்கொண்டுவருகிறார்.

  பிரதமர் நேற்று தனது உரையில் பேசுகையில், சூரிய சக்தியை ஒட்டுமொத்த உலகும் தனது எதிர்காலமாக இதைப் பார்க்கிறது. நம் நாட்டைப் பொறுத்த வரை சூரியனை வழிபடு தெய்வம் மட்டுமல்ல, வாழ்க்கைமுறையின் மையமாகவும் இருந்து வந்திருக்கிறார். பாரதம் இன்று தனது பாரம்பரியமான அனுபவங்களை நவீன விஞ்ஞானத்தோடு இணைத்து வருகின்ற வேளையில், இன்று நாம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறோம்.

  சூரியசக்தியால் நமது தேசத்தின் ஏழைகள் மற்றும் மத்திய வர்கத்தினரின் வாழ்க்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பதும் ஆய்வுக்குரிய விஷயம். தமிழ்நாட்டில், காஞ்சிபுரத்தில் இருக்கும் விவசாயி கே.எழிலன், பிரதம மந்திரி குசும் யோஜனா திட்டத்தினால் ஆதாயம் அடைந்தார், தனது வயலில் 10 குதிரைசக்தி திறன் உடைய(HP) சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டைப் பொருத்தினார். இப்போது இவர் தனது வயலில் மின்சாரத்துக்கான செலவு செய்ய வேண்டியிருக்கவில்லை. வயலில் நீர்ப்பாசனத்திற்காக இப்போது இவர் அரசின் மின்வழங்கலையும் சார்ந்திருக்கவில்லை. இதே போல ராஜஸ்தானின் பரத்பூரிலும் விவசாயி கமல்ஜி மீனா என்பவர் பிரதமர் திட்டத்தின் கீழ் சூரியசக்தி பம்ப் செட் மோட்டார் பொருத்தியுள்ளார். இது இவரது செலவினைக் குறைத்தது. செலவு குறைவானதால், வருமானம் அதிகரித்தது என்று பாராட்டி பேசினார்.

  இதையும் படிங்க: இந்த நகையே வேண்டாம்.. மன்னிப்பு கடிதத்தோடு திருடிய நகையை திருப்பிக்கொடுத்த திருடன்!

  பிரதமர் மோடி தன்னை மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசியதற்கு விவசாயி எழிலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரத்தின் தாமல் கிராமத்தைச் சேர்ந்த இவர், பட்டப்படிப்பு முடித்தவர். வேளாண்மை மீது கொண்ட ஆர்வத்தால் தனது வயலில் விவசாயம் செய்து வருகிறார். டீசல் மோட்டார் பயன்பாடு அதிக செலவை தருவதால், சோலார் பம்ப் திட்டத்தை தேர்வு செய்த எழிலன், தற்போது செலவை குறைத்ததுடன் சுற்றுச்சூழல் மசையும் தடுத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.நாட்டில் கடைக்கோடி விவசாயியான தன்னுடைய பெயரை பிரதமர் குறிப்பிட்டு பேசிய நெகிழ வைப்பதாகக் கூறிய அவர்,இதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Farmer, Kancheepuram, Mann ki baat, PM Modi