• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • துறையூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு! மோடி அறிவிப்பு

துறையூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு! மோடி அறிவிப்பு

மோடி

மோடி

ஒரே நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம் என்று அஞ்சப்படுகிறது. 

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருச்சி மாவட்டம் துறையூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்ச ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முத்தையம்பாளையம் கிராமத்தில் ’வாழ வைக்கும் வண்டித் துறை கருப்பண்ணசாமி’ கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடா வருடம் சித்ரா பவுர்ணமியையொட்டி திருவிழா நடப்பது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு திருவிழா முடிந்து பின்னர் மூன்றாவது நாளில் கோவில் பூசாரி தனபால் பிடிகாசை பக்தர்களிடம் தருவார். பிடிகாசை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை இருப்பதால், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், சேலம் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பிடிக்காசை வாங்கி செல்வதற்காக ஏராளனமானோர் வந்திருந்தனர்.

    கூட்டம் அதிகமாக இருந்ததால், முன்டி அடித்து கொண்டு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 4 பெண்கள் 3 ஆண்கள் என 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து துறையூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒரே நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ’திருச்சி மாவட்டம் துறையூரிலுள்ள கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழந்த விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



    பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்தனை செய்கிறேன். அதிகாரிகள் மூலம், தேவையான உதவிகள் செய்யப்படும். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம்பட்டவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: