மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, ஜாடிக்கு ஏத்த மூடி- மு.க.ஸ்டாலின்

மத்தியிலும் மாநிலத்திலும் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்

மோடிக்கு எடப்பாடி பழனிசாமி, ஜாடிக்கு ஏத்த மூடி- மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: April 16, 2019, 12:46 PM IST
  • Share this:
மோடிக்கு ஏத்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி, ஜாடிக்கு ஏத்த மூடி என்று மு.க.ஸ்டாலின் பரப்புரையில் பேசினார்.

திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டி. கலைவாணனை ஆதரித்து கொராடாச்சேரி பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், கலைஞரின் மகன் நான் மட்டுமல்ல நீங்களும் தான். மோடியின் தயவில்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் தற்போது 97 எம்எல்ஏக்கள் உள்ளோம். வரப்போகும் 22 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று 119 தொகுதியை பெற்று ஆட்சியமைப்போம். இந்த தேர்தலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப் போகிறீர்கள் என்று கூறினார்.


மேலும் கருணாநிதி என்னை பற்றி பேசும்போது உழைப்பு என்று சொல்வார். அது தான் எனக்கு ஊக்கம். நான் திடீரென்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. படிப்படியாக வளர்ந்தவன். எதிர்க்கட்சி தலைவராக மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தேன் என்று பேசினார்.

பாசிச சாடிஸ்ட் மனப்பான்மை கொண்டவர் மோடி . அந்த மோடிக்கு ஏத்தவர் தான் எடப்பாடி. ஜாடிக்கு ஏத்த மூடி என்று பேசினார். மத்தியிலும் மாநிலத்திலும் நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம். எண்ணை எரிவாயு குழாய்கள் விளைநிலங்கள் வழியாக பதிக்கப்பட மாட்டாது என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also watch

First published: April 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்