நியூஸ் 18 செய்தி எதிரொலி - தமிழ்நாடு முழுவதும் விவசாய உதவித்தொகை திட்ட பதிவுகள் தற்காலிக நிறுத்தம்

நியூஸ் 18 செய்தி எதிரொலியால் தமிழ்நாடு முழுவதும் pm-kisan திட்ட பதிவுகள் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

நியூஸ் 18 செய்தி எதிரொலி - தமிழ்நாடு முழுவதும் விவசாய உதவித்தொகை திட்ட பதிவுகள் தற்காலிக நிறுத்தம்
தமிழ்நாடு முழுவதும் pm-kisan திட்டம் பதிவுகள் தற்காலிக நிறுத்தம்
  • Share this:
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு  மழை மற்றும் வறட்சி காரணமாக நிவாரணம் வழங்கும் வகையிலும் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் pm-kisan திட்டம் மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இந்த 6000 ரூபாய் நான்கு மாதத்திற்கு 2000 என வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிப்பு வெளிவந்தது. 2018 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் விவசாயிகள் pm-kisan திட்டத்தின் மூலம் வருவாய்த் துறையிடம் தங்கள் நிலத்திற்கான பட்டா சிட்டா சான்றிதழ் வாங்கிக்கொண்டு வேளாண்மை துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து இந்த உதவித்தொகையை பெற்று வந்தனர்.

பின்னர் குறைந்த அளவே விவசாயிகள் பயன் பெறுவதால் அதிகளவு விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகளே தானாக முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம், வருவாய்த்துறையினர் உதவியோ வேளாண்மை துறை உதவி வேண்டாம் என அறிவிப்பு வந்தது.


இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து விவசாயிகள் தானாக முன்வந்து ஆன்லைனில் உதவிக்கு விண்ணப்பம் செய்தனர். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தளவில் இதுவரை ஒரு லட்சத்து 79,000 விண்ணப்பங்கள் வந்துள்ளது. இதில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில்  வேளாண்மை துறை அனுமதியோடு விவசாயிகளுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் கடலூர் அடுத்த பிள்ளையார் மேடு கிராமத்தில் விவசாயிகள் அல்லாதவர்களின் வங்கி கணக்கில் ரூபாய் நான்காயிரம் சென்றுள்ளது.

இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஒரு தனிநபர் தங்களது வங்கிக் கணக்கில் நான்காயிரம் செலுத்தி இருப்பதாகவும் ஆயிரம் ரூபாய் தனக்கு கமிஷனாக கொடுக்கும்படி கேட்டுள்ளார்.இந்த தகவல் பரவலாக பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. புகாரின்பேரில் ஆட்சியர் சந்திரசேகர சாகா மூரி  விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையானது வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையில் பிள்ளையார் மேடு கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியில் இருந்தவர்கள் ஆதார் கார்டு மற்றும் வங்கி புத்தக அட்டைகளை வைத்துக்கொண்டும் சுய உதவி குழு உள்ள பெண்களின் அடையாள அட்டை ஆதார் காடுகளை வைத்துக்கொண்டு pm-kisan திட்டத்தில் விண்ணப்பம்  நடைபெற்றுள்ளது. இந்த விண்ணப்பம் அனைத்தும் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றதாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தற்போது ஆதாரங்களை கைப்பற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நியூஸ்18தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. தமிழக வேளாண்மைத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி முறைகேடு சம்பந்தமாக தெரிவிக்கையில், புகார்கள் பல மாவட்டங்களில் இருந்து வந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குற்றவியல் வழக்கில் கைது செய்யப்படுவார்கள். முழு விசாரணை நடத்திய பின்னர் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். செய்திகள் தொடர்ந்து வெளியானதையடுத்து தமிழ்நாடு முழுவதும் கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.

இதனால் பல மாவட்டங்களில் pm-kisan திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயி ஒருவர் நிலத்திற்கான சான்று வைத்திருந்தால் மட்டுமே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தாலும் அதனை மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னர் தான் சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் பணமானது செலுத்தப்படும் ஆனால் கடலூரில் விவசாயிகளே அல்லாத 500க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கில் தற்போது நான்காயிரம் செலுத்தப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை துறை அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது விசாரணை நடைபெற்று வருகிறது முடிந்த பின்னர்தான் தவறு எங்கு நடந்துள்ளது என தெரியவரும் என தெரிவித்து விட்டனர்.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading