Home /News /tamil-nadu /

Pm-kisan: பிரதமரின் கிஷான் நிதியுதவி திட்ட செயலி முடக்கம்: பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

Pm-kisan: பிரதமரின் கிஷான் நிதியுதவி திட்ட செயலி முடக்கம்: பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

பிஎம். கிசான்

பிஎம். கிசான்

PM Kisan Samman Nidhi Yojana: . pm-kisan என்ற தொலைபேசி செயலி மூலமாக புதிய விவசாயிகள் ஆதார் எண் மூலம் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
பிரதமரின் கிஷான் திட்டத்தில் பதிவு செய்ய முடியாமல் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த அண்டு ஜனவரி மாதத்தில் இருந்து புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியவில்லை என  புகார் எழுந்துள்ளது.

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என மொத்தம் 3 தவணைகளாக ஒரு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தில் புதிய விவசாயிகள் இந்தாண்டு பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். pm-kisan என்ற தொலைபேசி செயலி மூலமாக புதிய விவசாயிகள் ஆதார் எண் மூலம் பதிவு செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: கடந்த முறையை காட்டிலும் பல்வேறு துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு... பிடிஆர் வெளியிட்ட கணக்கு இதோ






தற்காலிகமாக இந்த செயலி முடக்கப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடமும்  கடலூர் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: PM-Kisan: வருஷத்துக்கு ரூ. 6000 கிடைக்கனும்னா இதை கட்டாயம் செய்யனும்!


கடந்த 2018 ஆம் ஆண்டு pm-kisan திட்டத்தில் போலியாக விவசாயிகள் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட தால் pm-kisan திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சூழ்நிலையில் புதிய விவசாயிகள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Farmers, Govt Scheme, PM Kisan

அடுத்த செய்தி