Home /News /tamil-nadu /

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் முறைகேடு - கடலூரில் ₹ 4.20 கோடி பறிமுதல்; 10 பேர் சஸ்பெண்ட்

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் முறைகேடு - கடலூரில் ₹ 4.20 கோடி பறிமுதல்; 10 பேர் சஸ்பெண்ட்


பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் முறைகேடு

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் முறைகேடு

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் திட்டத்தில் முறைகேடாக பெறப்பட்ட 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பிரதம மந்திரி கிஸான் திட்டம் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் முறைகேடாக பயனாளர்களை சேர்த்ததாக கடலூர் மாவட்டத்தில் புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், கடலூர் மாவட்டத்தைச் சேராத 40 ஆயிரம் பேரை, கடலூர் பயனாளிகளாக சேர்த்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலி பயனாளர்களின் கணக்கில் இருந்து 4 கோடியே 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ALSO READ |  சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை - பென்னிக்ஸின் தாயாரிடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

    இவ்விவகாரத்தில் ஏற்கெனவே 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், பிரதம மந்தரி கிஸான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒப்பந்த ஊழியர்கள் நால்வர், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Cuddalore, PM Cares, PMModi

    அடுத்த செய்தி