ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விவசாயிகளே! இந்த முறை ₹2000 பெற ஆதார் எண் கட்டாயம் இணைக்கனும்...! எளிமையாக இணைக்க இதோ வழி...

விவசாயிகளே! இந்த முறை ₹2000 பெற ஆதார் எண் கட்டாயம் இணைக்கனும்...! எளிமையாக இணைக்க இதோ வழி...

பிம் கிஷான்

பிம் கிஷான்

பி.எம்.கிசான் பயனாளிகள் 13 வது தவணை தொகையினை பெறுவதற்கு eKYC எனும் ஆதார் எண் உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி’’ திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6,000/- மூன்று தவணைகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக ஒன்றிய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து பயன்பெறுவதற்கு ஆதார் எண் உறுதி அவசியம்

    நடப்பாண்டில், 13-வது தவணையாக, அதாவது 2022, டிசம்பர் முதல் 2023 மார்ச் முடிய உள்ள காலத்திற்கான தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஒன்றிய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

    Also read : ஸ்மார்ட் விவசாயிகளுக்கு சூப்பரான செய்தி....! ₹2 லட்சம் பரிசு காத்திருக்கு.. உடனே விண்ணப்பம் செய்யுங்க

    எவ்வாறு ஆதார் எண்ணை உறுதி செய்வது?

    பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதிசெய்து கொள்ளலாம்.

    1. உங்களுக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று, தனது பெயரை பி.எம்.கிசான் இனைய தளத்தில் e-KYC செய்ய வேண்டுமென்று கோரும் நிலையில்

    i. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை (One Time Password) பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது

    ii. பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    2. உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்குச் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்..

    இது தொடர்பாக கூடுதல் விவரம் ஏதும் அறிய விரும்பினால், உங்கள் வட்டார வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    Published by:Vijay R
    First published:

    Tags: Agriculture, Farmers