விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை - பிரதமர் மோடி

பாஜக அரசின் நல்ல திட்டங்கள் சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்

news18
Updated: February 10, 2019, 8:30 PM IST
விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை - பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி
news18
Updated: February 10, 2019, 8:30 PM IST
விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை, விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயற்சித்து வருகின்றனர் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஆந்திராவிலிருந்து விமானம் மூலம், கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடியை விமானநிலையத்தில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றடைந்தார்.திருப்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப் பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘‘பாஜக அரசின் நல்ல திட்டங்கள் சிலருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மக்கள் வரி செலுத்துவதால்தான் நல்ல திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. விவசாயக் கடன்கள் தள்ளுபடியால் அதிக பலன் இல்லை. விவசாயிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்.

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்துவதன் மூலம் மீனவர்கள் அதிகளவில் பயனடைவர். 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். இந்த ஆண்டு முதன் முறையாக பிரதம மந்திரி விவசாய நல நிதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 10% இட ஒதுக்கீட்டால் பட்டியல் இன மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என்று பேசினார்

கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ் - பிரதமர் மோடி


Also watch

First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...