• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

பள்ளி மாணவிகள்

பள்ளி மாணவிகள்

பனிரென்டாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யபட்டதை தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி சுமார் 8 லட்சம் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியானது. முதல்முறையாக தசம எண்களில் மதிப்பெண் அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த முறையில் வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் திருப்தி அளிக்கவில்லை என கருதும் மாணவர்கள் தேர்வெழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மேலும் படிக்க...தமிழகத்தில் 16 பொறியியல் கல்லூரிகளை மூட முடிவு

    இதனையடுத்து மாநிலம் முழுவதும் +2 துணைத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்படுகிறது. காலை 11 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க...மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மூன்றாவது அலைக்கான ஆரம்பமா?

    விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: