ப்ளஸ் 2 மறுதேர்வு; மதுரையில் 8 மாணவர்களுக்கு 8 மையங்கள் அமைப்பு

கோப்பு படம்

மதுரை மாவட்டத்தில் ப்ளஸ்2 மறுதேர்வு எழுத 8 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி தேர்வு மையங்கள் என 8 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Share this:
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் இறுதிப் பாடத்துக்கான தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. ஜூலை 27-ல் நடைபெறும் இந்தத் தேர்வுக்காக மதுரை கல்வி மாவட்டத்தில் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மேல்நிலைப்பள்ளி, மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை மாநகராட்சி காக்கைபாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கேகே நகர் அருள் மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ALSO READ : ஆகஸ்ட் 1 முதல் 14 சேனல்கள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பு... அமைச்சர் செங்கோட்டையன்

இதைப்போல் 13 தனித்தேர்வர்கள் பிளஸ் 2 மறுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அமலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருமங்கலம் பி கே என் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அண்ணாநகர் அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை காமராஜர் சாலை சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் மதுரை மாவட்டத்தில் 34,640 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் 32 ,726 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அதில் 14,864 மாணவர்கள், 17,862 மாணவிகள் அடங்குவர்.
Published by:Sankaravadivoo G
First published: