பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்

news18
Updated: May 16, 2018, 10:52 AM IST
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் மாவட்டம் முதலிடம்
தேர்வு எழுதும் மாணவர்கள்
news18
Updated: May 16, 2018, 10:52 AM IST
கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6,754 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலை பள்ளிகளின் எண்ணிக்கை 1,907 ஆகும். இதில் விருதுநகர் மாவட்டம் கடந்த ஆண்டை போலவே 97 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இதேபோல 96.3 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டவது இடத்தையும், 96.2 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும்  பெற்றுள்ளன.

பாடங்களின் அடிப்படையில் தேர்ச்சி விகிதம்: இயற்பியல் 96.4%, வேதியல் 95.0%, உயிரியல் 96.3%, கணிதம் 96.1% , தாவரவியல் 93.9%, விலங்கியல் 91.9%, கணினி அறிவியல் 96.1%, வணிகவியல் 90.3 சதவீதம் , கணக்குப் பதிவியலில் 91.0 சதவிகிதமும் ஆகும். ப்ளஸ் 2 தேர்வை 2602 மாற்றுத் திறனாளி மாணவர்கள் எழுதிய நிலையில், 2110 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் கடந்தாண்டு 92.9 சதவீதம் இருந்த சென்னை தேர்ச்சி விகிதம் இந்தாண்டு 93.09 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநிலத்திலேயே குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டம் விழுப்புரம் என செய்தி வெளியாகியுள்ளது. இதன் தேர்ச்சி விகிதம் 83.35 சதவீதமாகும்.

மேலும் இந்தாண்டு ப்ளஸ் 2 தேர்வில் மொத்தமாக 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு 92.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த வருடம் தேர்ச்சி 91.10 சதவீதமாக குறைந்துள்ளது.

 
First published: May 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்