Home /News /tamil-nadu /

"காப்பாத்துங்க... ஆணவக்கொலை செய்ய பார்க்குறாங்க..." - கெஞ்சும் மாணவி (வீடியோ)

"காப்பாத்துங்க... ஆணவக்கொலை செய்ய பார்க்குறாங்க..." - கெஞ்சும் மாணவி (வீடியோ)

ஆணவக்கொலை மாதிரி படம்

ஆணவக்கொலை மாதிரி படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் ஆணவக் கொலை செய்ய முயற்சிப்பதாக கல்லூரி மாணவி ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ வெளியிட்டுள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி பெரில், சஜூ என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்ததையடுத்து, பெரிலின் பெற்றோர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    பெரிலை கல்லூரிக்கு செல்லவிடாமல், அவரது உறவினர் வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், தனது குடும்பத்தினர், காதலன் சஜூவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கல்லூரி மாணவி பெரில் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை அடித்து துன்புறுத்தி, காதலன் சஜூ மீது பொய் புகார் அளிக்க வற்புறுத்துவதாகவும், ஆசிட் ஊற்றிவிடுவதாக குடும்பத்தினர் மிரட்டுவதாகவும் பெரில் குற்றம்சாட்டியுள்ளார்.

    "காப்பாத்துங்க... ஆணவக்கொலை செய்ய பார்க்குறாங்க..." - கெஞ்சும் மாணவி (வீடியோ) pic.twitter.com/UeW2bYc4Wx



    சமீபத்தில் தெலங்கானாவில் நடைபெற்ற ஆணவக்கொலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில், மாணவியின் இந்த பகீர் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    ALSO WATCH...

    Published by:SPDakshina Murthy
    First published:

    Tags: Begs, Collage Girl, Honour killing, Kannyakumari, Please save me

    அடுத்த செய்தி