ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 2 மடங்கு உயர்வு- அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்

சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 2 மடங்கு உயர்வு- அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்

ரயில்

ரயில்

Platform ticket price: 8 முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்ட்ரல் , எழும்பூர் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்க 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை கட்டண உயர்வு அமலில் இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் அக்டோபர் 1 ம் தேதி முதல் 2023 ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதி வரை நடைமேடை கட்டணம் பத்து ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  விழாக் காலங்கள் வருவதால் நடைமேடைகளில் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் , எழும்பூர் ரயில் நிலையம் , தாம்பரம் , காட்பாடி , செங்கல்பட்டு , அரக்கோணம் , திருவள்ளூர் , ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

  தீபாவளி ,கிருஸ்துமஸ் , ஆங்கில புத்தாண்டு பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ள நிலையில் நடைமேடைக் கட்டண உயர்வு வரும் ஜனவரி 31 ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Indian Railways, Railway Station