ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

8 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் குறைந்தது... பயணிகள் மகிழ்ச்சி!

8 ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் மீண்டும் குறைந்தது... பயணிகள் மகிழ்ச்சி!

 ரயில்

ரயில்

8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கொரோனா கட்டுபாடுகள் முடிந்தவுடன் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. அதனால் அதனை குறைக்கும் விதமாக பண்டிகை காலங்களில் சென்னை சென்டிரல், எழும்பூர் உள்பட 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டிருந்தது.

  இந்த நடைமுறை அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஏற்கனவே சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், அந்த 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்துமீண்டும் ரூ.10 ஆக  குறைக்கப்பட்டுள்ளது.

  Also see... ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு...

  அதன்படி, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

  இந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். நடைமேடை டிக்கெட் கட்டணத்தில் ரூ.10 குறைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Railway, Tamil Nadu