வாக்குச்சாவடியில் இயந்திரங்களை மறைக்க பேப்பர் அட்டைக்கு பதில் பிளாஸ்டிக் சீட்கள்!

தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முன் வைப்பதற்கு பேப்பர் அட்டைகளுக்குப் பதில் பிளாஸ்டிக் சீட்கள் வைக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

news18
Updated: April 15, 2019, 4:54 PM IST
வாக்குச்சாவடியில் இயந்திரங்களை மறைக்க பேப்பர் அட்டைக்கு பதில் பிளாஸ்டிக் சீட்கள்!
பிளாஸ்டிக் சீட்டுகள்
news18
Updated: April 15, 2019, 4:54 PM IST
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முன் வைப்பதற்கு பேப்பர் அட்டைகளுக்குப் பதில் பிளாஸ்டிக் சீட்கள் வைக்கத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18ம் தேதி பாராளுமன்ற தேர்தலும் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைதேர்தலும் நடைபெற உள்ளது.

வாக்குப் பதிவு மையங்ளில் வாக்காளர்கள் ஒட்டு பதிவு செய்யும்போது, வேறு யாரும் பார்க்காதவண்ணம் பேப்பர் அட்டைகள் கொண்டு தடுப்பு ஏற்படுத்துவது வழக்கம்.

பிளாஸ்டிக் சீட்டுகள்

இந்தாண்டு பேப்பர் தடுப்புகளுக்கு பதில் குஜராத் மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் அட்டைகள் வரவழைக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்ப பட்டுள்ளன.

மானாமதுரை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 321 வாக்குச்சாவடிகளுக்கு பிளாஸ்டிக் அட்டைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒரு கட்டுக்கு 30 சீட்கள் வீதம் 25 கட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 16ம் தேதி அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் இதனை அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பார்க்க:
First published: April 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...