இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முக்கவசம் அணிந்து செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான பயணங்களின் போது விமான நிறுவனங்களே பயணிகளுக்கு முகக் கவசங்களை வழங்குகின்றன. இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலமாக விமானத்தில் பயணம் செய்யக்கூடிய நபர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் மூலம் முககவசம் தயாரித்து வழங்கி வருவதாக தகவல் வெளியானது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன் அடிப்படையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அந்த முகக்கவசத்தை ஆய்வு செய்ததது. இண்டிகோ விமான நிறுவனத்தினால் வழங்கப்படும் முகக்கவசத்தில் உள்ள பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் அடுத்த 7 நாட்களுக்குள் 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையை செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai corporation, Corona, Covid-19, Face mask, Indigo Air Service, Tamil News, Tamilnadu