Home /News /tamil-nadu /

பிளாஸ்டிக் தடை: ரூ.100 முதல் ஒரு லட்சம் வரை... யார் யாருக்கு எவ்வளவு அபராதம்?

பிளாஸ்டிக் தடை: ரூ.100 முதல் ஒரு லட்சம் வரை... யார் யாருக்கு எவ்வளவு அபராதம்?

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அமலுக்கு வந்ததில் இருந்து சென்னையில் மட்டும் கடந்த மார்ச் 30-ம் தேதி வரை 3457 கடைகளில் சோதனை நடத்தி 6451.5கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யபட்டது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அமலுக்கு வந்ததில் இருந்து சென்னையில் மட்டும் கடந்த மார்ச் 30-ம் தேதி வரை 3457 கடைகளில் சோதனை நடத்தி 6451.5கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யபட்டது.

பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தமிழகம் முழுவதும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கான தடை ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    முதல்முறை என்பதால் தடையை மீறியவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. மறுமுறை விதிகளை மீறுவோருக்கான தண்டனை மற்றும் அபராதம் குறித்த எந்த அறிவிப்பும் தமிழக அரசின் ஆணையில் இடம்பெற்றிருக்கவில்லை.

    இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை மீறுபவர்களுக்காக அபராதம் மற்றும் தண்டனை விவரங்கள் அடங்கிய மசோதாவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

    அதில், குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமான ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    Tn assembly | தமிழக சட்டப்பேரவை
    தமிழக சட்டசபை


    சிறிய வணிக விற்பனையாளர்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்ற வகைக்கு முதல் தடவைக்கு 100 ரூபாயும், இரண்டாம் முறைக்கு 200 ரூபாயும், மூன்றாம் முறைக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    மளிகைக்கடைகள் மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 1000 ரூபாயும், இரண்டாம் தடவை 2000 ரூபாயும், மூன்றாம் தடவை 5000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

    வணிக வளாகங்கள், துணிக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துதல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தடவை 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தடவை 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

    பயன்படுத்தப்பட்ட மற்றும் தூக்கிவீசப்பட்ட பிளாஸ்டிக்கை சேமித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் பகிர்ந்தளித்தல் போன்ற குற்றத்துக்கு முதல் தடவை 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் தடவை 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் தடவை ரூ.1 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

     

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Plastic Ban

    அடுத்த செய்தி