Home /News /tamil-nadu /

ஆதரவற்றவர்களுக்கு மாற்றத்தை விதைத்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை!

ஆதரவற்றவர்களுக்கு மாற்றத்தை விதைத்துள்ள பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை!

காகிதப் பைகளை தயாரிக்கும் முதியவர்கள்

காகிதப் பைகளை தயாரிக்கும் முதியவர்கள்

ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு முதியோர் உதவி தொகையை வழங்க வேண்டும், சுயதொழிலில் முன்னேற உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
நெல்லையில் உணவுக்காக அடுத்தவர்களை நம்பியிருந்த ஆதரவற்றவர்களின் வாழ்வில், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மாற்றத்தை விதைத்துள்ளது.

எங்கும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் என்ற நிலை குறைய தொடங்கியிருக்கிறது. பிளாஸ்டிக் தடை அறிவிப்புக்கு பிறகு, மாற்றுப்பொருட்களை மக்கள் தேட ஆரம்பித்துள்ளனர். இதனால் காகித பை, துணி பை உள்ளிட்ட பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.

இதுவே நெல்லை டவுன் ஆதரவற்ற இல்லத்தில் வாழ்பவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் உணவை இரவில் உண்ணும் ஆதரவற்றோர், காலை, மதியம் உணவுக்காக அடுத்தவர் கையை நாட வேண்டி இருந்தது. இந்த நிலையை பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை மாற்றியுள்ளதுடன், அவர்கள் சுயமாக சம்பாதிக்க வழி செய்துள்ளது.

ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் 30 பேருக்கு காகித பை தயாரிப்பது குறித்து முறையான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் பலனாக இரண்டு நாளில் 30 கிலோ காகித பை உற்பத்தி செய்கின்றனர். கிலோ 50 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு காகித பை விற்கப்படுவது தங்களுக்கு மனநிறைவை தருவதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு முதியோர் உதவி தொகையை வழங்க வேண்டும், சுயதொழிலில் முன்னேற உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுசூழலை காக்க அறிவிக்கபட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை, பல நல்ல பலன்களை தந்ததுடன் பலரும் வாழ்வில் வெளிச்ச கீற்றுகளை ஒளிர்விட செய்துள்ளது.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Plastic Ban

அடுத்த செய்தி