முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 3.5 லட்சம் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.. TNPSC குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் 3.5 லட்சம் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.. TNPSC குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

TNPSC: அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படவுள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையப் பயிற்சி மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், அரசு பணிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாகவும், பல்வேறு இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்தாலும் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டியதுள்ளது என்றார். இதற்கு நிபுணர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வு மேற்கொண்டு வரும் இந்த குழுவுடன் முதற்கட்ட ஆலோசனையும் நடைபெற்று முடிந்துள்ளாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சரின் சொந்த ஊர்... எம்.எல்.ஏ. பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும், இந்த குழு 6 மாதத்தில் பரிந்துரைகளை தரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், நிதி முக்கியதுவம் என்றாலும், மனிதவளமும் முக்கியம் என்று கருதி முதலமைச்சர் செயல்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்தார். எனவே இந்த ஆய்வு முடியும் போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அடிப்படை கட்டமைப்பே சீரமைக்கப்படும் என்றார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

First published:

Tags: Minister Palanivel Thiagarajan, TN Assembly, TNPSC