முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நாட்டில் முதன் முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா

நாட்டில் முதன் முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • Last Updated :

நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா ஒன்று தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் 1100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும் என தமிழக அரசின் தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் உள்ள முக்கிய தகவல்கள், 1. சென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு, பெங்களூரு - கொச்சி மற்றும் தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் பெருவழி ஆகிய நான்கு பெருவழிகள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ளன .

2. தமிழ்நாட்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களுக்கு மேம்பட்ட சூழல் அமைப்பை வழங்கிடும் வகையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றவகையில் ஒருங்கிணைந்த தொழில் நகரங்களை நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது .

3. வழிகாட்டி நிறுவனம், நிதிநுட்ப கொள்கை, உயிர் அறிவியல் - ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் உற்பத்திக் கொள்கை, ஏற்றுமதித்திட்டம், திருத்தப்பட்ட மின் வாகனக் கொள்கை போன்றவைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

4. தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 45,000 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கான நில வங்கிகள் உருவாக்கப்படும். தொழில்துறையில் பின் தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய நில வங்கிகள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும்.

5. நாட்டிலேயே முதன்முறையாக பன்னாட்டு அறைகலன் பூங்கா ஒன்று தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் 1100 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். அதிக அளவிலான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உருவாகும் இப்பூங்கா டிசம்பர் 2021ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

6. மருத்துவ உபகரணத் தொழிற் பூங்கா ஒன்று சிப்காட் ஒரகடம் தொழிற் பூங்காவில் 150 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும். மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்காங்கள் அமைக்கப்பட உள்ளன.

7. ஆவடி பட்டாபிராமில் 235 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை டைடல் பார்க் நிறுவனம் அமைத்து வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமான பணி பிப்ரவரி 2023 ல் முடிக்கப்படும்.

8. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

9. சுற்றுச்சூழல் பாதுகாப்போடு கூடிய எதிர்கால போக்குவரத்து வாகன அமைப்புகளை ஊக்குவிக்க மாநல்லூர் தொழிற்பூங்காவில் மின் வாகனப் பூங்கா ஒன்று 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Must Read : போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

10.கெலவரப்பள்ளி அணையிலிருந்து ஓசூர் பகுதியில் அமைந்துள்ள தொழில்சாலைகளின் நீர் தேவையை பூர்த்தி செய்ய 20மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட TTRO சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைக்க சிப்காட் நிறுவனம் உத்தேசித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    11.சிப்காட் வல்லம்-வடகால் மற்றுப் பெருந்துறை தொழிற்பூங்காக்களில் 1,50,000 சதுர அடி மற்றம் 50,000சதுர அடி கொண்ட கட்டுமானத்தில் ஆயத்த தொழிற்கூட வசதிகள் அமைக்கப்மடவுள்ளன. கனகரக பளுதூக்கிகள், கனரக இயந்திரங்களை நகர்த்தும் வசதி எடை மேடை மற்றம் தொலைத்தொடர்பு வசதிகளுடன் இத்தொழிற்கூடங்கள் அமைக்கப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Thoothukudi, TN Assembly