ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு? அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு? அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Stalin discussion

Stalin discussion

Pongal gift | பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல்கட்டமாக 243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்குவது குறித்து கைத்தறி துறை அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி சேலை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

  வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக ரூ.243.96 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  ' isDesktop="true" id="840137" youtubeid="rxhKsn36DeM" category="tamil-nadu">

  மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வில்லையில்லா வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது என்றும் இந்த திட்டத்தை ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also see... 3வது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன?

  அதுமட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி சேலைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் 15 டிசைன்களில் மற்றும் பல நிறங்களில் சேலையும் 5 டிசைன்களில் வேட்டியும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் பொங்கல் பரிசு பரிசு குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CM MK Stalin, Pongal